
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் அரசு..!! “இதில் தேர்ச்சி பெற்றால் போதும்..விண்ணப்பிக்கும் முறை உள்ளே”..!!
அதாவது, 2024-25 கல்வியாண்டில் 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு” அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இத்தேர்வுக்கான இடஒதுக்கீடு 1000 என்றும், அதில் 500 இடம் மாணவர்களுக்கு மற்றும் 500 இடம் மாணவிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 என்ற கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தம்..!! ” அரசு அதிரடி அறிவிப்பு”..!!
பாடத்திட்டங்கள்: இத்திறனாய்வு தேர்வானது கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடத் தொகுப்புகளின் அடிப்படையில் 2 தாள்களாக நடத்தப்படும். முதல் தாளுக்கு கணித பாடங்களில் இருந்து 60 வினாக்கள் மற்றும் 2வது தாளுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 60 வினாக்கள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். இதை தொடர்ந்து, 1 தாள் காலை 10 மணி-12 மணி வரையிலும், 2ம் தாள் மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
1. தமிழ்நாடு அரசின் https://dge.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை பார்வையிடவும்.
2. விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் 30.11.2024 முதல் 09.12.2024 வரை வழங்கப்பட்டுள்ளது.
3. விண்ணப்பம் செய்ய கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
4.அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, 09.12.2024 தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


























Super
Super