இன்றிரவு கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்.. வானிலை ஆர்வலர் எச்சரிக்கை..

0
???????? ????? ????????? ???????? ?????.. ?????? ??????? ??????????..
இன்றிரவு கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்.. வானிலை ஆர்வலர் எச்சரிக்கை..

இன்றிரவு கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்.. வானிலை ஆர்வலர் எச்சரிக்கை..

 

கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்றது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், இன்று மதியம் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட  நிலையில், ஃபெஞ்சல் புயலானது இன்றிரவு முதல் அதிகாலைக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

மேலும் ஓர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!! ” தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகவல்”..!!

மேலும்,  சென்னையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை 12 செ.மீ மேல் மழை பதிவாகியுள்ளதாகவும், புயல் எந்தளவுக்கு தாமதமாக கரையை கடக்கிறதோ அந்த அளவுக்கு மழை அதிகரிக்கும் எனவும்  தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் இன்று மாலைக்கு மேல் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும், சென்னையில் அடுத்த 18 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும், இப்புயலானது மகாபலிபுரம்- மரக்காணம் இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!