ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்?? BCCI முக்கிய முடிவு!!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தால், பயிற்சியாளர் பதவியை பகிர்ந்தளிக்க BCCI நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட்டுக்கு தனித்தனி பயிற்சியாளரை நியமிக்க BCCI முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை தனித்தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

























