தமிழகத்தில் நாளை (11.11.2024) மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது மின் பயனர்கள் மற்றும் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு குறித்து மின் வாரிய இணையதளத்தில் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (நவம்பர் 11) கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கைகளத்தூர்:
அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்.
கோயம்புத்தூர்:
மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்
ஈரோடு:
மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்.
மேட்டூர்:
பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்
காரைக்குடி:
காரைக்குடி, கழனிவாசல், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பர்மா காலனி, கல்லுக்கட்டி, செஞ்சை.
இந்திராநகர்:
சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

























