IND vs SA 2024: தொடரை வெல்லுமா இந்தியா?? இன்று தென்னாப்பிரிக்கா அணியுடன் பலப்பரீட்சை!!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. கடந்த முறை தோல்வியை சந்தித்த தென் ஆப்பிரிக்கா அணி இந்த முறை கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த இரு அணி வீரர்களும் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று 7.30 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த மைதானம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு போட்டி சவாலாக இருக்கும். இதனால் இன்றைய போட்டியில் சேசிங் செய்வதே சிறந்தது. இதனால் எந்த அணி டாஸ் வென்றாலும் பந்து வீச்சை தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























