ரூ.500 ஊக்கத்தொகையுடன், ரூ.15,000 மானியமும் வழங்கும் அருமையான திட்டம்..!! ” இதோ உங்களுக்காக”..!!
நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் “பிரதான் மாதிரி விஸ்வகர்மா யோஜனா” என்ற திட்டத்தை மத்திய அரசு POST OFFICE மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் 5% வட்டி விகிதத்துடன் ரூ.3 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படுகிறது. அதாவது, இதில் முதலீடு செய்யும் பயனாளிகளுக்கு முதலில் 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதை சரியாக கட்டி முடிக்கும் பட்சத்தில், 2வது முறையாக ரூ.2 லட்சம் கடனும் 3வது முறையாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.
IND vs SA 2024: போட்டியை இலவசமாக ஒளிபரப்பும் ஜியோ சினிமா.. வெளியான முக்கிய தகவல்.!
விண்ணப்பிக்கும் தகுதி:
பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். மேலும், PMEGP, PM SVANidhi போன்ற திட்டங்களில் கடனை பெறாதவர்களாக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, PM விஸ்வகர்மா திட்டத்தில் கடன் பெறும் பயனாளிகளுக்கு, அந்தந்த துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, நாள் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படுகிறது. மேலும், தொழில் தொடங்குவதற்கான கருவிகள் வாங்குவதற்கு ரூ.15,000 மானியமாக வழங்கப்படுவதால் மக்கள் மத்தியில் இத்திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இந்த திட்டத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இதை பற்றி தெரிவித்து அவர்களை பயனடைய செய்யுங்கள்.
இதுபோன்ற திட்டங்களை பற்றி அறிந்து கொள்ள EXAMSDAILY தமிழ் இணையதள பக்கத்தை தொடர்ந்து பார்வையிடவும்.


























