தொப்புள் கொடி வீடியோ விவகாரம்.. மீண்டும் வருத்தம் தெரிவித்த இர்பான்.. விவரம் உள்ளே!!
தமிழகத்தில் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய யூடியூபராக இர்பான் மாறி இருக்கிறார். அடிக்கடி யூடியூப்பில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு வருவதால் அவரை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்து வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இர்பான் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். இதற்கு மருத்துவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் வருகை.. அதிரும் தமிழக அரசியல் களம்.. ஜொலிக்குமா த,வெ.க??
இந்நிலையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் இர்ஃபான் வருத்தம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடிதத்தின் மூலம் பதிவு செய்துள்ளார். எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை எனவும், மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


























