இரட்டிப்பாகும் தீபாவளி போனஸ் – முழு விவரங்களுடன்!
தமிழகத்தில் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இது போன்ற பண்டிகை காலத்தில் மாத ஊதியத்துடன் பண்டிகை போனஸ் வழங்குவதும் வழக்கமான ஒன்று. அவ்வாறு பெறப்படும் முன் பணத்தை பயன்படுத்தி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு வருகிற 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போனஸ் வழங்குவது தொடர்பான ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.
நெருங்கியாச்சு தீபாவளி – இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!
அரசு அலுவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் போக்குவரத்து சங்கங்கள் சார்பாக அகவிலைப்படியை உயர்த்த கோரி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட இந்த கடிதத்தின் மீது அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்பட்டது. இதனால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் ஒரே தவணையாக ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

























