
அட, POST OFFICE முதலீட்டாளர்களுக்கு அடிச்சது பாரு லக்கு..!! “1 முறை முதலீட்டில் மாத வருமானம் ரூ.20,000-மா…”??
தற்போதைய காலகட்டத்தில் சாமானிய மக்களும் சேமிப்பு தொடங்க வேண்டும் என்பதற்காக “POST OFFICE” பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மூத்த குடிமக்கள் (SCSS) திட்டமானது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை அள்ளிக் கொடுக்கும் திட்டமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் ஒரு முறை டெபாசிட் செய்தால், மாதந்தோறும் ரூ.20,000 பெறுவதற்கான வழிமுறைகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் நாளை (22.10.2024) முழு நேர மின்தடை அறிவிப்பு.. ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமானது 60 வயதிற்கு மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு 8.2% வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும், இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்றாலும், நமக்கு தேவைப்பட்டால் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். அதுமட்டுமின்றி, 55 வயது முதல் 60 வயதிற்குள் ஓய்வூதியம் பெற விரும்பும் நபர்களும் இதில் முதலீடு செய்யலாம். உதாரணமாக, இப்போது நீங்கள் ரூ. 30 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், ஆண்டுக்கு வட்டி வருமானம் மட்டுமே உங்களுக்கு ரூ. 2,46,000 கிடைக்கும். எனவே, 5 ஆண்டுகள் முதிர்வு அடையும் போது நீங்கள் ரூ. 20,500 என்ற கணக்கில் மாத வருமானத்தை ஈட்டலாம். அதுமட்டுமின்றி, இது சட்டப்பிரிவு 80C-யின் கீழ் இயங்குவதால், ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை நீங்கள் வரி விலக்கு கோரலாம்.























