தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல எரிபொருள் வாகனங்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மேலும், தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக எரிபொருளின் விலையானது எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையான விலையில் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
இன்றைய நிலவரப்படி, நெல்லையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.
























