இல்லத்தரசிகளே..!! இன்றைய காய்கறிகளின் விலை குறைவா..? அதிகரிப்பா..? முழு விவரம் உள்ளே..!!
நமது அன்றாட வாழ்க்கையில் காய்கறி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்தகைய காய்கறிகள் நாளுக்கு நாள் வெவ்வேறான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை பார்க்கலாம் வாருங்கள்.
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 46 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பீட்ரூட் 31 ரூபாய், உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 44 ரூபாய், கேரட் 37 ரூபாய், முருங்கைக்காய் 60 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய், பீன்ஸ் 44 ரூபாய்,பூண்டு 221 மற்றும் வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மேலே குறிப்பிட்ட காய்கறிகள் நேற்றும், இன்றும் ஒரே நிலையான விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
























