
UIIC-ல் 200 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம்-ரூ.96,765|| உடனே முந்துங்கள் ..!!
UNITED INDIA INSURANCE COMPANY (UIIC) ஆனது Administrative Officer (Scale I)-Specialists & Generalists பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
UIIC காலிப்பணியிடங்கள்:
UIIC நிறுவனத்திலுள்ள 200 Administrative Officer (Scale I)-Specialists & Generalists காலிப் பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 21-30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,925-ரூ.96,765/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Online exam/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் UIIC இணையதளமான https://uiic.co.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.11.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.























