வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்துள்ளீர்களா?? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!!
சென்னையில் பொதுவாக மழைக்காலத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதும், வாகனங்கள் தண்ணீரில் மூழ்குவதும் வழக்கம். இதனால் தண்ணீர் தேங்கும் பகுதிகளை சேர்ந்த வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையாக பாலத்தில் வாகனங்களை நிறுத்தினர். இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட கார்களுக்கு மட்டும் போலீசார் அபராதம் விதித்தனர்.
மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!! ” இதோ உங்களுக்காக”..!!
இந்நிலையில் மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட கார்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் கூறியுள்ளார். அதாவது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் அதிதீவிர கனமழைக்கான வாய்ப்பு குறைந்ததாகவும், அடுத்த 6 மணி நேரத்திற்கு மிதமான மழையே பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், சென்னையில் 20 cm க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளார்.


























