ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

0
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பர். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட சற்று பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்.

நாளை ராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!! ” 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கிறது…அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்”..!!

இந்நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். 108 ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்காக 12,500 பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ரயில்கள் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!