நாளை ராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!! ” 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கிறது…அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்”..!!

0
நாளை ராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!! ” 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கிறது…அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்”..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு உதவியுடன் அந்நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 28.09.2024 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முஹம்மது சதக் ஹமீது பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. மேலும், வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழு விவரங்களை விரிவாக கீழே பார்க்கலாம்.

கல்வித்தகுதிகள்:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 18- 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், 8th/10th/12th/ITI/diploma/degree/B.E முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மாணவர்களே உஷார்…கல்விக் கடன் வாங்க போறீங்களா..?? ” அப்போ, இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வேலைவாய்ப்பு சிறப்பம்சங்கள்:

1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நாளை வேலைவாய்ப்பு முகாமை ராமநாதபுரத்தில் நடத்த உள்ளது. மேலும், இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தொழில்நெறி ஆலோசனைகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம் வழங்குதல், இலவச திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு முதலியவை நாளை நடைபெறுகிறது. மேலும், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ முதலியவற்றின் நகல் மற்றும் அசலுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற லிங்க்கை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!