டெல்லியில் பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள் என்ன??

0
டெல்லியில் பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள் என்ன??

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (27.09.2024) சந்தித்துப்பேசினார். இந்நிலையில் பிரதமரை சந்தித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘பிரதமருடனான சந்திப்பு இனிய சந்திப்பாக அமைந்தது’. ‘மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமர் மோடியிடம் தான் உள்ளது’.

சொத்து வரி 6% வரை உயர்கிறது…!! ” மாநகராட்சி அதிரடி அறிவிப்பு”..!!

‘மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டிய 3 கோரிக்கைகளை பிரதமரிடம் மனுவாக அளித்துள்ளோம்’.’மெட்ரோ 2-வது கட்ட பணிகளுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்’. ‘ஒருங்கிணைந்த கல்வி நிதியையும் உடனடியாக வழங்க வலியுறுத்தி உள்ளோம்’. ‘மத்திய அரசு 60%, தமிழக அரசு 40% நிதியுடன் இணைந்து செயலாற்றும் கல்வி திட்டத்திற்கான நிதியும் தரப்படவில்லை’. ‘மத்திய அரசின் நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!