டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.15 லட்சம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
Legal Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் LLB தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DIC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Legal Officer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Legal Officer கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் LLB தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
DIC வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Legal Officer முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
DIC ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Legal Officer தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

























