அரசு துறைமுகங்கள் தனியார்மயமா..? மத்திய அரசு முடிவு என்ன..?
நமது நாட்டில் உள்ள அனைத்து கப்பல் துறைமுகங்களை தனியார்மயமாக்க போவதாக மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. அதாவது, மத்திய அரசுக்கு சொந்தமான துறைமுகங்கள் தனியார்மயமாக்கபட்டால் அங்கு பணிபுரியும் பணியாளர்களின் வருமானம் மற்றும் நிலைமை கேள்விக்குறியாக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் கருத்துகின்றன . இதனால், நாடு முழுவதும் உள்ள 12 துறைமுகங்களும் இன்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தன.
இனி ரயிலில் FREE BIRD ஆஹ் பயணிக்கலாம் ..! ரயில்வே துறை அறிவிப்பு..!
அதை அறிந்த மத்திய அரசு இத்தகைய போராட்டங்களினால் துறைமுகங்களின் வேலைகள் பாதிக்கப்படும் என்பதால் இன்று துறைமுக தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், இத்தகைய பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அனைத்து துறைமுக பணியாளர்களும் எதிர்ப்பார்க்கின்றன.
























