பழனியில் தொடங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு..!! ” ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்”..!! முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!
உலகத்தில் உள்ள பக்தர்களின் சிந்தனைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டுமென்று தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 2024-ம் ஆண்டிற்கான முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் தொடங்கியது. இதனை குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
பொதுமக்கள் கவனத்திற்கு…, இந்த வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
முத்தமிழ் முருகன் மாநாடு;
பழனியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில், அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு இறை நம்பிக்கை என்பது இருக்கும். அந்த நம்பிக்கைகளை ஒருபோதும் தளர்த்தும் விதத்தில் திராவிட மாடல் அரசு செயல்பட்டதில்லை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் முருகன் பாடலை பாடி முடிக்கும் வரை, எழுந்து நின்று முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியானது இன்று நாளையும் நடைபெறும் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இது அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்பதால் 3 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























