விஷமாக மாறிய குளிர்பானம்..! சிறுமியின் உயிரை பறித்த கொடூரம்..!
நமது நாட்டில் தற்போது குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்து கொண்டு உள்ளது. அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குளிர்பானங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து பானங்கள் விற்பதில் சில கட்டுப்பாடுகள் விதித்தன. தற்போது சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், நீண்ட நாட்களாக விற்காமல் இருக்கும் பானங்கள் ஆகியவற்றை கடை உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் குளிர்பானம் வாங்க வரும் மக்கள் அதை கவனிக்காமல் வாங்கி செல்கின்றனர் .
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனை தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானம் குடித்ததால் ஒரு சிறுமியின் உயிர் பறிபோனது. இத்தகைய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா?? போக்குவரத்துத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அதாவது, தமிழகம் முழுவதும் இருக்கும் ஆலைகள் மற்றும் குளிர்பான கடைகளை கண்டறிந்து சோதனை செய்து காலாவதியான குளிர்பானங்கள் விற்கும் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


























