பதஞ்சலி நிறுவனத்தின் அவமதிப்பு வழக்கு…. 3 முறை மன்னிப்பு கேட்டாரா..???
மனிதர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் அழகை சற்று அதிகரித்து கொள்வதற்காக பல வேதி பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில், அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்கும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக பதஞ்சலி ஆயுர்வேதம் உள்ளது. இந்நிறுவனம் குறித்து எழுந்த அவமதிப்பு வழக்கினைப் பற்றி நீதிமன்றம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
Examsdaily -ல் வேலைக்கு சேர விருப்பமா? சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
பதஞ்சலி அவமதிப்பு வழக்கு;
மக்களை ஈர்க்கும் வகையில் தவறாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீதிமன்றம் நிறுவனத்தின் மீதுஅவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதனைத்தொடர்ந்து, “தவறாக விளம்பரம் செய்ய மாட்டோம்” என்று பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனர் “பாபா ராம்தேவ்”, இது போன்று செயல்கள் மீண்டும் நடக்காது என்று 3 முறை நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதாக தெரியவந்துள்ளது ..


























