5 மாத மலையேற்றத்தில் முதுமை தோற்றத்தை பெற்ற இளைஞர்!! – என்ன காரணம் தெரியுமா ?
சீனாவை சேர்ந்த தைஷன் என்ற இளைஞர் வினோதமான ஒரு காரியத்தை செய்து மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். தற்போது இவருக்கு 24 வயது ஆகும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு காதல் தோல்வி காரணமாக மலையேற தொடங்கியுள்ளார். தொடர்ந்து இவர் 5 மாத மலையேற்றத்திற்கு பிறகு மிகவும் வயதான தோற்றத்தை பெற்றிருக்கிறார். இவரது முடிகள் உதிர்ந்தும், நரைத்தும் வயதான தோற்றத்தில் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
ரேஷன் கார்டு இருந்தால் 5 லட்சம் வழங்கப்படும்..!! “முதல்வர் அறிவிப்பு”..!!!
மேலும், தைஷன் தன் உண்மையான வயதை கூறும் போது யாரும் நம்பாமல் அடையாள அட்டையை பார்த்த பிறகு நம்புகிறார்கள் என்று மனமுடைந்து கூறியிருக்கிறார். தற்போது அனைவரும் இவரை அங்கிள் என்று அழைத்து கேலி செய்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத தைஷன், இப்படி வாழ்வது தான் எனக்கு மன அமைதியைத் தருகிறது, நான் இப்படியே வாழ ஆசைப்படுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

























