பாடப்புத்தகங்களின் விலை உயர்வு … அதிர்ச்சியில் பெற்றோர்கள் …!!!
தமிழகத்தில், பொதுவாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக கல்வித்துறையே புத்தகங்களை அச்சடித்து இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும், மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரசு , மாணவர்கள் பயன் பெரும் வகையில் மலிவு விலையில் பாடப்புத்தகங்களை மொத்தமாக கொள்முதல் விலைக்கு விற்பனை செய்துவருகிறது.தனியார் பள்ளிகள் அப்புத்தகத்திற்கான விலையை தங்கள் பள்ளிக்கட்டணத்தில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், தற்போது தனியார் பள்ளிகளில் விற்கும் அரசு பாடநூல் புத்தகங்களின் விலைகளையும் உயர்த்தி உள்ளதாக தமிழக கல்வித்துறை தெரிவித்துள்ளது .
புத்தகங்களின் விலை பட்டியல்:
1ம் வகுப்பு பாட புத்தகத்தின் விலை 390 ரூபாயாக இருந்து வந்த நிலையில் தற்போது 550 ரூபாயாகவும் ,2 ம் வகுப்பு பாட புத்தக பழைய விலை 380 இருந்து 530 ரூபாயாகவும் , 3 ம் வகுப்பு பாட புத்தகம் 620 ரூபாய் , 4ம் வகுப்பு பாட புத்தகம் 650 ரூபாய், 5 ம் வகுப்பு பாட புத்தகம் 710 ரூபாய் , 6 ம் பாட புத்தகம் 1110 ரூபாய் , 7 ம் வகுப்பு பாட புத்தகம் 1200 ரூபாய் , 8 ம் வகுப்பு பாட புத்தகம் 1000 ரூபாய் , 9ஆம் வகுப்பு பாட புத்தகம் 1110 ரூபாய் , மற்றும் 10 ம் வகுப்பு பாட புத்தகம் 1130 ரூபாய்க்கும் அதிகரித்து விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.


























