ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரருக்கு தடை.. என்ன காரணம்?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
ஊக்க மருந்து சோதனை என்பது போட்டிகளில் பங்கேற்கும் வீரர் ஏதாவது ஊக்கமருந்து பயன்படுத்தி உள்ளாரா என்பதை கண்டறிய நடத்தப்படும் ஒன்றாகும். அந்த சோதனையில் ஒரு வீரர் ஊக்க மருந்து பயன்படுத்துவதை நிரூபிக்கப்பட்டால் அவர்களின் விளையாட்டு வாழ்க்கைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் . அந்த வகையில் இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்.

தற்போது இவர் தொடர்பாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் பிரேமத் பாகத்தை உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு 18 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. ஊக்க மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


























