தமிழக பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு – விடைக்குறிப்பு தகவல்கள்!
தமிழகத்தில் இன்று பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கான விடை குறிப்பு குறித்த தகவல்கள் காணலாம்.
விடை குறிப்புகள்:
தமிழகம் முழுவதும் உள்ள 2582 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் பிப்ரவரி 4ஆம் தேதியான இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 130 தேர்வு மையங்களில் நடத்தப்படும் தேர்வில் 41,485 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு குறித்த அனைத்து விதிமுறைகளும் முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவர்கள் இதனை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் விடை குறிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
விடைக்குறிப்புகளை தெரிந்து கொள்ள முதலில், trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான விடை குறிப்பு என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். பின்னர், கேட்கப்படும் உங்கள் பதிவெண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு தேர்வுக்கான விடை குறிப்புகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். விடைக்குறிப்புகளில் உள்ள ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேர்வர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.