UIDAI ஆதார் துறையில் காத்திருக்கும் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Technical Officer, Assistant Section Officer, Private Secretary மற்றும் Senior Account Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) |
பணியின் பெயர் | Technical Officer, Assistant Section Officer, Private Secretary & Senior Account Officer |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
UIDAI காலிப்பணியிடங்கள்:
- Technical Officer – 4 பணியிடங்கள்
- Assistant Section Officer – 4 பணியிடங்கள்
- Private Secretary – 1 பணியிடம்
- Senior Account Officer – 1 பணியிடம்
என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதி விவரங்கள்:
பெற்றோர் கேடர்/துறையில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்கும் மத்திய அரசின் அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
- Technical Officer – Pay Matrix 8
- Assistant Section Officer – Pay Matrix 6
- Private Secretary – Pay Matrix 8
- Senior Account Officer – Pay Matrix 10
UIDAI வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.36,000/- || முழு விவரங்களுடன்!
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதார்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.