சென்னையில் அதிரடி பேட்டிங்.. நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி!!
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேச அணியினரை வீழ்த்தி நியூசிலாந்து 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேச அணியினர் மோதிக் கொண்டனர். ஏற்கனவே, நியூசிலாந்து அணியினர் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் வங்காளதேச அணியுடன் மோதி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. இதனை அடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியினர் 50 ஓவரின் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 245 ரன்கள் குவித்தனர்.
தமிழகத்தில் 38 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் உத்தரவு!
இதன் பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் 42.5 ஓவர்களிலேயே 248 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மூன்று போட்டியிலும் வெற்றியை குவித்ததால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே, வங்கதேச அணி இங்கிலாந்து அணியுடன் மோதி 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கும் நிலையில் தற்போது நியூசிலாந்து அணியுடன் மோதி மீண்டும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால், அடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் கட்டாயமாக வங்கதேச அணி வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.