உச்சகட்ட விலையேற்றத்தில் தங்கம் .. கிராம் ரூ.5,000ஐ தாண்டியது – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னையில் இன்றைய சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.7 அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் விலையால் பொதுமக்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
ஆபரணத் தங்கம் என்பது வெறும் அணிகலனாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீடாகவும் உள்ளது. பாதுகாப்பாக உள்ள முதலீடுகளில் தங்கம் தான் முன்னிலையில் உள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதிக அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதால் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 1வாரத்தில் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.5,000 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் 8ம் தேதியான இன்றைய காலை நிலவரத்தின் படி, 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5023க்கும், 1 சவரன் ரூ.40,184 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தை புரட்டி எடுக்கும் மாண்டஸ் புயல்.. 3 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”!
Exams Daily Mobile App Download
இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5425 க்கும், 1 சவரன் ரூ. 43400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக வெள்ளியின் விலையானது நேற்றை விட இன்று 30 பைசா அதிகரித்து 1 கிராம் ரூ.71.30 க்கும், 1 கிலோ ரூ.71300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.