DRDO நிறுவனத்தில் காத்திருக்கும் JRF பணியிடம் – ரூ.31,000/- சம்பளம் || உடனே விண்ணப்பியுங்கள்!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Defence Research and Development Organisation (DRDO) |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online & Offline |
DRDO காலிப்பணியிடங்கள்:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) Junior Research Fellow (JRF) பணிக்கு என 02 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Junior Research Fellow கல்வி விவரம்:
Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் AICTE -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Engineering, Information Science போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
Junior Research Fellow திறன்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் திறன்களை பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- Experience in utilizing open- source system development framework.
- Knowledge of Major Machine Learning Algorithm.
- Having excellent programming skills in C, C++, Python, and HMI development.
- Proficiency in design and analysis of algorithms.
Junior Research Fellow வயது வரம்பு:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனவே 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
DRDO சம்பளம்:
Junior Research Fellow (JRF) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
DRDO தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Coaching Center Join Now
DRDO விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
The Director,
DRDO Young Scientist Laboratory – Cognitive Technology,
Defence Research and Development Organisation (DRDO),
5th Floor, IITM Research Park,
Taramani, Chennai-600113.