தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் இலவச வேட்டி, சேலைகள் – புதிய சிக்கல்!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு வர இருக்கும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இலவச வேஷ்டி, சேலைகளை தயாரிக்கும் பணிகள் இன்னும் துவங்காததால் நெசவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை தொடர்ந்து இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்காக விசைத்தறி நெசவாளர்களுக்கு நூல் கொடுக்கப்படவில்லை என்று நெசவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தென் சென்னையில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
அதாவது ஆண்டு தோறும் சுமார் ஒரு கோடி 80 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகை பரிசாக விலையில்லா வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்குகிறது. இந்த வேட்டி, சேலைகளை தயாரிப்பதற்கு சுமார் ஆறு மாத காலம் அவசியம் என்பதால், ஒவ்வொரும் ஆண்டும் ஜூன் மாதத்திலேயே அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விசைத்தறி நெசவாளர்களுக்கு பாவுநூல், ஊடை நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் வழங்கப்படும்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகைக்காக 499 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. என்றாலும் சேலைகளை தயாரிப்பதற்கு வேண்டிய நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்படவில்லை. இதனால் வேட்டி மற்றும் சேலை உற்பத்தியில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தில் 1,30,000 ஆயிரம் விசைத்தறிகள் செயல்படாமல் இருப்பதால் அதனை சார்ந்து இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் யார் யாருக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் பேட்டி!
மறுபக்கத்தில், ஜூன் மாதம் கொடுக்கப்பட வேண்டிய டெண்டர் இந்த மாதத்தில் கொடுக்கப்பட்டாலும், நூல்களுக்கு சாயம் இடும் பணிகள் முடிவடையவே அக்டோபர் மாதம் ஆகும். அதனால் இன்னும் 3 மூன்று மாதங்களுக்குள் 1 கோடி 80 லட்சம் குடும்பங்களுக்கும் வேட்டி, சேலைகளை வழங்க முடியாது என்று நெசவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்