CA ஜூன் மாத முதல்நிலை தேர்வு – இன்று முதல் விண்ணப்ப பதிவு!!

0
CA ஜூன் மாத முதல்நிலை தேர்வு - இன்று முதல் விண்ணப்ப பதிவு!!
CA ஜூன் மாத முதல்நிலை தேர்வு - இன்று முதல் விண்ணப்ப பதிவு!!
CA ஜூன் மாத முதல்நிலை தேர்வு – இன்று முதல் விண்ணப்ப பதிவு!!
ICAI தேர்வு ஆணையம் 2021ம் ஆண்டுக்கான ஜூன் மாத முதல்நிலை தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CA தேர்வுகள்:

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) பட்டயக் கணக்கறிஞர்கள் (CA) தொழிலை வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். பட்டயக் கணக்காளராக விரும்பும் நபர்கள் ICAI நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.

மே 1ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!!

நடப்பு ஆண்டு தேர்வுகள்:

2021 ஜூன் மாத முதல்நிலை தேர்வுகள் ஜூன் மாதம் 24, 26, 28 மற்றும் 30ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்த மே 4ம் தேதி இறுதி நாளாகும். தேர்வு கட்டணத்தை அதற்குள் செலுத்த தவறினால் ரூ.600 தாமத கட்டணத்துடன் மே 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு நேரம்:

முதல்நிலைத் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 3 மணி நேரங்கள் நடைபெறும். மூன்றாம் மற்றும் நான்காம் தாள் மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் 2 மணி நேரம் நடைபெறும். முதல் மற்றும் 2ம் தாள்களுக்கு முன்னதாக 15 நிமிடங்கள் வாசிப்பிற்கு வழங்கப்படும். 3ம் மற்றும் 4ம் தாளுக்கு வாசிப்பு நேரம் கிடையாது. தேர்வு குறித்த அதிக தகவல்களுக்கு http://icaiexam.icai.org என்ற அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!