தமிழகத்தில் தியேட்டர்கள் இயக்கம் – உரிமையாளார்கள் முடிவு!!
தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தியேட்டர்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காட்சிகளின் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தியேட்டர்களில் கட்டுப்பாடுகள்:
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்று (ஏப்ரல் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஏறத்தாழ 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. பின்பாக கடந்த வருடம் இறுதியில் திரையரங்குகள் மீண்டுமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதிலும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறையாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. புதிய திரைப்படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் புதிய திரைப்படங்களின் திரையிடல் துவங்கியது. மக்களும் திரையரங்குகளுக்கு செல்ல துவங்கினர். தற்போது எதிர்பாராத விதமாக கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா முழு ஊரடங்கு அச்சம் – சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்!!
இதன்படி திரையரங்குகளில் மீண்டுமாக 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் நேற்று (19-04-2021) காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு திரையரங்குகளை இயக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காட்சி நேரங்களில் மட்டும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரயில் சேவை நாளை முதல் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
முன்னதாக மால்களில் உள்ள திரையரங்குகளில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், 4வது காட்சி மாலை 6 மணிக்கும் திரையிடலாம் என திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதுள்ள சூழலில் அரசின் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு மால்களில் 3 காட்சிகள் மட்டும் திரையிடலாம் என்று ஆலோசனை செய்துள்ளனர். தற்போது திரையரங்குகளில் கர்ணன், சுல்தான் ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருவதால், அடுத்த படங்கள் வெளியாகும் வரை, இந்த திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.