தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் குமரிக்கடல் பகுதிகளில் (1.5 கிலோமீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தமிழகத்தில் கோடைமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோடை வெயிலில் இருந்து மக்கள் தப்பித்துள்ளனர். இந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் (1.5 கிலோமீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
14.04.2021:
தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் மீண்டும் முழு பொதுமுடக்கம்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
15.04.2021:
தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
16.04.2021:
தென் தமிழகம் வட உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
நாடு முழுவதும் போக்குவரத்துக்கு தடை? மத்திய அரசு இன்று ஆலோசனை!!
17.04.2021, 18.04.2021:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 11 செ.மீ பெய்துள்ளது.