என்இஎஸ்டி நுழைவுத் தேர்வு நுழைவுச்சீட்டு – மே 20ம் தேதி வெளியீடு!!
தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் என்இஎஸ்டி நுழைவுத் தேர்வு ஜூன் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அதற்கான ஹால் டிக்கெட் மே 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள்:
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள அணுசக்தி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள் மூலமாக நடைபெறுகிறது. 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழங்க விண்ணப்ப பதிவு கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதற்கான விண்ணப்பங்கள் https://www.nestexam.in/ என்ற இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி ஆகும். இந்த தேர்வுகள் ஜூன் மாதம் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இந்த நுழைவுத் தேர்வுகள் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 90 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் மே மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் மே 20 முதல் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC exam