தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

1
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் விடுமுறை:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர் நோய்த்தொற்று குறைந்ததன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஜனவரி 19 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெறுகிறது.

TN Job “FB  Group” Join Now

9, 10, 11ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 9 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வயது வரம்பு – TRB பதிலளிக்க உத்தரவு!!

மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளும் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகளும் விரைவில் நடைபெற உள்ளது. எனவே 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!