தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு பணி 95% நிறைவு! அமைச்சர் விளக்கம்!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நகைக்கடன்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அதில் முக்கிய வாக்குறுதியான நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் எடுத்த கணக்கெடுப்பில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மொத்த நகைக்கடன் 85 ஆயிரம் கோடி என்று கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை (டிச.3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போதைய கொரோனா பரவல் சூழலில் அரசுக்கு உள்ள நிதி நெருக்கடியில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய இயலாத நிலையில் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி கூட்டுறவு சங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றதில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து முறையாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர், கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 95% பணிகள் முடிவடைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் 2,500 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.700 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 75 கூட்டுறவு மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.