ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதம் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் 6 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை:
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் செயல்படும் மற்றும் விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த நாட்காட்டியின் அடிப்படையில் வங்கிகள் செயல்படும் நாட்கள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான விடுமுறை நாட்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் ஆறு நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். மேலும் விடுமுறை நாட்கள் குறிப்பிட்ட மாநில விழாக்களை அடிப்படையாக கொண்டிருப்பதால், தேதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் கவனத்திற்கு!
எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது சிறந்தது. இதில் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
Exams Daily Mobile App Download
இது போக மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை நாட்களிலும் விடுமுறை ஆகும். மே மாதத்தில், மொத்தம் 11 வங்கி விடுமுறைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாத விடுமுறை நாட்கள்:
- ஜூன் 5 – ஞாயிறு
- ஜூன் 11 – சனிக்கிழமை
- ஜூன் 12 – ஞாயிறு
- ஜூன் 19 – ஞாயிறு
- ஜூன் 25 – சனிக்கிழமை
- ஜூன் 26 – ஞாயிறு