AAI நிறுவனத்தில் ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
AAI நிறுவனத்தில் ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
AAI நிறுவனத்தில் ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
AAI நிறுவனத்தில் ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Consultant பணியிடம் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (24.05.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அகமதாபாத், நாக்பூர், சோழபூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) Consultant பணிக்கு என 07 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Join Our TNPSC Coaching Center

  • Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்ற Dy. Collector, தாசில்தார் அல்லது அதற்கு சமமான பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
    Exams Daily Mobile App Download
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Interview மற்றும் Merit Ranking மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

AAI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த விமானத்துறை பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (24.05.2022) மட்டுமே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!