அப்டேட் ஆகப்போகும் 50 ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கி!
ரூ.5,00/- மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 98.15 சதவீத நோட்டுகள் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளன. மீதமுள்ள நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை. அதாவது ரூ. 6577 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பது எப்படி? உடனே தெரிஞ்சுக்கோங்க!
இந்நிலையில் தற்போது புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நோட்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்ற சஞ்சய் மல்கோத்ரா அவர்களின் கையொப்பம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தி படத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. புதிய நோட்டுகளுடன் பழைய நோட்டுகளும் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.


























