
மாற்று திறனாளிகளுக்கு ரூ.2000 பராமரிப்பு தொகை.. வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு – முதலமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. இது வரையிலும் அவர்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் சிறப்புரையாற்றியுள்ளார்.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் மாற்று திறனாளிகளும் மற்றவர்களை போல சமூகத்தில் தனி இடத்தை அமைத்து கொள்ள ஏதுவாக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு அரசு வந்துள்ளது. இது குறித்து பேசிய முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கான துறை தனி கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Follow our Instagram for more Latest Updates
தற்போது அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய தமிழக அரசு 7 பேர் கொண்ட துணைக்குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் திருமணத்தின் போது உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய ஊழியர்களுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை தான் வேலை – குண்டை தூக்கி போட்ட அமேசான்!
Exams Daily Mobile App Download
அத்துடன் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை 2000 ஆக உயர்த்தபட்டுள்ளதை குறிப்பிட்டார்.இதனால் தமிழகம் முழுவதும் 2,11,391 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சேவைகள் சென்றடையும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.