ICC 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்றால் ரூ.33 கோடி பரிசு – வெளியான அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறும் ICC 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்றால் வழங்கப்பட இருக்கும் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பரிசு அறிவிப்பு
இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பிசிசிஐ இணைந்து நடத்தும் ICC 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற அக். 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் கலந்து கொள்கிறது. சமீபத்தில் ICC 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தீம் பாடல் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
அதனை தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் ICC 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதே போல இரண்டாவது இடத்தை பெறும் அணிக்கு ரூ.16.50 கோடி பரிசுத்தொகையும், உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்கும் அணிக்கு சுமார் ரூ. 6.50 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.