நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு – தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!!!

0
நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு - தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!!!
நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு - தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!!!
நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு – தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!!!

புதுவையில் வார இறுதி ஊரடங்கு முறைக்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை முதல் 3 நாட்களுக்கு, தீவிர கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கொரோனா தொற்று:

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை புதுவையில் தீவிரமடைந்து வரும் நிலையில் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி ஊரடங்கு அதாவது வெள்ளி கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரைக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை – ஆசிரியர்கள் கோரிக்கை!!!

நோயின் தீவிரம்:

புதுவையில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றினால் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுவையில் சிகிச்சை பலனின்றி கொரோனா பாதிப்பினால் 3 பேரும், காரைக்காலில் 1 நபரும் உயிரிழந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

கட்டுப்பாடுகள்:

ஏப்ரல் 26ம் தேதி முதல் கடைகள், நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.  திருமணங்களை நூறு பேரை கொண்டு நடத்த வேண்டும், இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதை தவிர அனைத்து மதுபான கடைகளும் 26 ஆம் தேதி முதல் மதியம் 2 மணிக்குள் மூட வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here