கிளாசன் வாணவேடிக்கை…தென்னாப்பிரிக்கா 382 ரன்கள் குவிப்பு!!!!
2023 உலக கோப்பை தொடரின் 23வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனால் பங்களாதேஷ் அணி முதலில் பவுலிங் செய்தது. துவக்க வீரர் டிகாக் 140 பந்துகளில் 174ரன்கள் விளாசி அசத்த பின்வரிசை வீரர்களும் வரிந்து கட்டி ரன் குவித்தனர்.
குறிப்பாக கிளாசன் வாணவேடிக்கை காட்ட 49 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். கேப்டன் மார்க்ரம் 60 ரன்கள் விளாச 50 ஓவர்களில் 382 ரன்கள் குவித்தது. இறுதி 10 ஓவர்களில் மட்டும் மில்லர் மற்றும் கிளாசன் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து அசத்தினர்.
தற்போது 383 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்பதால் வங்கதேச அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 5வது வெற்றி – புள்ளி பட்டியலில் முதலிடம்!!
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
தென்னாப்பிரிக்கா : குயின்டன் டி காக்(டபிள்யூ), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(சி), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லிசாட் வில்லியம்ஸ்
பங்களாதேஷ் : தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன்(கேட்ச்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம்(வ), மஹ்முதுல்லா, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத்