2021 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!!

0
2021 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை - RBI அறிவிப்பு!!
2021 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை - RBI அறிவிப்பு!!
2021 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!!

2021ம் ஆண்டு முழுவதும் வங்கிகளின் விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புதிய ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மொத்தம் 14 வங்கி விடுமுறை நாட்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கி:

நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அரசின் கருவூலகம் இந்திய ரிசர்வ் வங்கி ஆகும். நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளையும் இயக்கி வருகிறது. இந்திய நாட்டின் நாணயத்தின் மதிப்பு ரிசர்வ் வங்கி கையில் வைத்திருக்கும் தங்கம் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கொண்டு தான் மதிப்பிடப்படுகிறது. நாட்டிற்கு தேவையான பணத்தை வெளியிடுவதும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணியாகும்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு – புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர் வழக்கு தள்ளுபடி!!

வங்கி விடுமுறை:

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ரிசர்வ் வங்கி அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறை தினங்களை முன்கூட்டியே அறிவிக்கும். அந்த வகையில் 2021ம் ஆண்டிற்கான வங்கி விடுமுறை தினங்களை 2020ன் கடைசியிலே வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 14 நாட்கள் வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்று கிழமைகள் தவிர்த்து 8 வங்கி விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் விடுமுறை தினங்களை பரிசீலித்து தான் நாட்டின் மற்ற தனியார், வெளிநாடு மற்றும் கூட்டுறவு வங்கிகளும் தங்களின் விடுமுறை தினங்களை அறிவிக்கும்.

அதனால் வங்கிகளில் மாதாந்திர தவணை மற்றும் முக்கிய பரிவர்த்தனைகள் செய்யும் பொது மக்கள் இந்த விடுமுறை தினங்களை சரிபார்த்து தங்களின் வேலையை வங்கிகளில் முடித்து கொண்டால் சிரமத்தை தவிர்க்கலாம். மேலும் அந்த அந்த மாநிலங்களை பொறுத்து பிராந்திய விடுமுறை நாட்கள் மாறுபடலாம். வங்கிகள் விடுமுறை தினங்களில் மூடப்பட்டிருந்தாலும் மொபைல் வழி வங்கி மற்றும் இணைய வழி வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். மேலும், 2021ம் ஆண்டு முழுவதும் 40 நாட்களுக்கு மேல் வங்கிகள் மூடப்படும் என்றும் RBI அறிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிச.31 கடைசி தேதி – தவறினால் ஜனவரி முதல் அபராதம்??

தேசிய விடுமுறை நாட்கள்:

01 ஜனவரி 2021- புத்தாண்டு
03 ஜனவரி 2021- வார விடுமுறை (ஞாயிறு)
09 ஜனவரி 2021 – இரண்டாவது சனிக்கிழமை
10 ஜனவரி 2021- வார விடுமுறை (ஞாயிறு)
17 ஜனவரி 2021- வார விடுமுறை (ஞாயிறு)
23 ஜனவரி 2021- நான்காவது சனி
24 ஜனவரி 2021- வார விடுமுறை (ஞாயிறு)
26 ஜனவரி 2021 – குடியரசு தினம்
31 ஜனவரி 2021- வார விடுமுறை (ஞாயிறு)

பிராந்திய விடுமுறைகள் (Regional Holidays):

ஜனவரி 2, சனி – புத்தாண்டு விடுமுறை
ஜனவரி 14, வியாழக்கிழமை – மகர சங்கராந்தி, பொங்கல்
ஜனவரி 15 – பிஹு
ஜனவரி 16 – உழவர் திருநாள்
ஜனவரி 25 – Sonam Lhochar/Himachal Statehood Day (Sikkim, Himachal Pradesh)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!