2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹிந்தி வார்த்தை ‘ஆத்மநிர்பர்தா’ – ஆக்ஸ்போர்டு அறிவிப்பு!!

0
2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹிந்தி வார்த்தை 'ஆத்மநிர்பர்தா' - ஆக்ஸ்போர்டு அறிவிப்பு!!
2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹிந்தி வார்த்தை 'ஆத்மநிர்பர்தா' - ஆக்ஸ்போர்டு அறிவிப்பு!!
2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹிந்தி வார்த்தை ‘ஆத்மநிர்பர்தா’ – ஆக்ஸ்போர்டு அறிவிப்பு!!

2020 ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ‘ஆத்மநிர்பர்தா’ என்ற வார்த்தை உள்ளதாக ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

மிக சிறந்த வார்த்தை:

ஆக்ஸ்போர்டு அகராதி குழுமம் ஐரோப்பிய நாட்டில் உள்ள பிரிட்டனை சேர்ந்த அமைப்பாகும். அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வார்த்தைகளை தேர்வு செய்து வெளியிடுவார்கள். இதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆதார் என்ற வார்த்தையும், 2018 ஆம் ஆண்டு நாரி சக்தி என்ற வார்த்தையும், 2019ல் சம்விதான் தேர்வு என்ற வார்த்தையும் சிறப்பான வார்த்தையாக உள்ளது.

போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி அறிவிப்பு ரத்து – மாநகராட்சி நிர்வாகம் முடிவு!!

இந்த ஆண்டு 2020-ல் ஹிந்தி மொழியில் சிறந்த வார்த்தையாக ‘ஆத்மநிர்பர்தா’ என்ற வார்த்தை உள்ளதாக ஆக்ஸ்போர்டு மொழிகள் அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின்படி,”நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தில் இருந்ததால் நாட்டின் பிரதமர் மோடி அதிகம் பயன்படுத்திய ஆத்மநிர்பர்தா என்ற வார்த்தை சிறந்த வார்த்தையாக உள்ளது.

அண்ணா பல்கலை எம்.டெக் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு – கே.பி.அன்பழகன் வலியுறுத்தல்!!

நாட்டு மக்கள் பொருளாதாரம், சமூகம் மற்றும் தனிநபர்கள் சுயமாக பிரச்னைகளில் இருந்து வெளியே வர வேண்டும் என்ற நோக்கில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. மக்களின் ஒட்டுமொத்த இந்திய குரலாக இந்த வார்த்தை இருந்ததால் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த வார்த்தையாக இந்த வார்த்தை தேர்வு செய்யப்பட்டது” என தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!