2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக். 7 கடைசி நாள் -RBI அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக். 7ம் தேதி கடைசி நாள் என ரிசர்வ் வங்கி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.1000 நோட்டுகள் மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. அது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல கடந்த மே மாதம் புதிதாக புழக்கத்தில் விடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை செப். 30 ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடைசி நாள் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், பெரும்பான்மையான மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை திருப்பி கொடுத்துள்ளனர். இன்னும் சில நோட்டுகள் திருப்பி வழங்கப்படாமல் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அக். 7ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.