
மீண்டும் மீண்டுமா..? வங்கக்கடலில் உருவாகும் 2 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!! வானிலை மையம் தகவல்..!!
கடந்த சில தினங்களுக்கு முன் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஃ பெஞ்சல் புயலாக வலுப்பெற்று, கடந்த ஞாயிற்றுகிழமை மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து எங்கும் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. இதனால், மக்கள் பலரும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஒருவாரம் கழித்து மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
அதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும், இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதியும் தற்போதைய நிலவரப்பபடி புயலாக மாற வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.























