ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் உட்பட 18 விதமான சேவைகள் – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!!

0
18 சேவைகளை ஆன்லைனில் பெறலாம் - மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு!!!
18 சேவைகளை ஆன்லைனில் பெறலாம் - மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு!!!
18 சேவைகளை ஆன்லைனில் பெறலாம் – மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு!!!

பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், நகல் உரிமம் பெறுதல் போன்ற 18 வகையான சேவைகளை இனி ஆன்லைன் முறையில் பெறலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து துறை:

நாட்டின் மத்திய சாலை போக்குவரத்து துறை பொதுவாக பல முக்கிய சலுகைகளை மக்களுக்கு வழங்கிவருகிறது. மேலும், நவீன காலத்திற்கு ஏற்ப போக்குவரத்து துறையிலும் பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் பாஸ்டாக் முறையை கொண்டு வந்தது. இதனால் மக்களின் நேரம் தேவை இல்லமால் சுங்க சாவடிகளில் வீணாவது தவிர்க்கப்படுகிறது.

கிராஸ் மேஜர் படித்தவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு இல்லை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!

புதிய ஆன்லைன் சேவை:

தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிதாக 18 சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக 12 இலக்க ஆதார் எண்ணை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றுடன் இணைத்தால் போதும் என்ற அறிவிப்பு வந்தது. தற்போது ஆன்லைன் மூலம் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

புதிய சேவைகள்:

எல்.எல்.ஆர்.சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிம நகல், உரிம சான்றிதழ் முகவரி மாற்றம், பதிவு சான்றிதழ், சர்வதேச ஓட்டுநர் அனுமதி, தற்காலிக மோட்டார் பதிவுக்கான விண்ணப்பம், முழுவதுமாக கட்டுமானம் செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தின் பதிவுக்கான விண்ணப்பம், வாகன பதிவு சான்றிதழ் நகல், வாகன பதிவுக்கான என்.ஓ.சி சான்று, மோட்டார் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், வாகன பதிவு சான்றிதழ் முகவரி மாற்ற அறிவிப்பு, ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பம், வாடகை வாகன ஒப்பந்த சான்று போன்ற புதிய 18 வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

elaivaippu Seithigal 2021

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!