
TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பநிலை உச்சத்தை தொடும்.. வானிலை ஆய்வாளர் வெளியிட்ட தகவல்..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சில பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தபோதும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று (09-04-2025) வேலூரில் 101.3 டிகிரியும், அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 100.76 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வானிலை நிலவரம் பற்றி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
டிரம்ப் விதித்த புதிய வரி விதிப்பு ரத்து.. வெளியான திடீர் அறிவிப்பு.. சீனாவின் நிலை என்ன..??
அதாவது, “ஏப்ரல் 11, 12 ஆகிய தேதிகளில் ராயலசீமா மற்றும் உள் கர்நாடக பகுதிகளில் இருந்து வெப்ப அலை தமிழ்நாடு நோக்கி வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும் எனவும், சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X தளத்தில் பதிவிட்டுள்ளார்”.


























