வங்கி ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிர்பாராத நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வாறு வழங்கப்படும் விடுமுறையானது Commercial Bank ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் கிராமப்புற மேம்பாட்டு வங்கி ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் விடுமுறை:
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையில் முக்கியமான மற்றும் எச்சரிக்கை மிகுந்த பதவிகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 10 நாட்களுக்கு அறிவிப்பு இல்லாத விடுப்பு அதாவது ஆச்சரிய விடுப்பு வழங்குவதாக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 7 இனி ‘தேசிய ஈட்டி எறிதல்’ தினம் – நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நாள்!
Commercial Bank ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் கிராமப்புற மேம்பாட்டு வங்கி ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 2015ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கருவூல செயல்பாடுகள், நாணய செஸ்ட், ரிஸ்க் மாடல், மாதிரி சரிபார்ப்பு போன்ற பிரிவுகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை மற்றும் ஆபத்துகள் நிறைந்த பணிகளை செய்பவர்கள் என அறிவித்தது.
TN Job “FB
Group” Join Now
இதன் அடிப்படையில் முக்கியமான மற்றும் எச்சரிக்கை மிகுந்த பதவிகளில் பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கட்டாய இடுப்பின் கீழ் ஆண்டுக்கு 10 நாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறு வழங்கப்படும் விடுமுறையானது ஊழியர் எதிர்பாராத நாட்களில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பாராத நேரத்தில் ஒரு ஆனந்த ஆச்சரியமாக இந்த விடுமுறை அளிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.